search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி கட்சி"

    • மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கட்சியில் இணைந்ததாக சேத் கூறியிருக்கிறார்.
    • மக்கள் சரியான சுகாதாரம் மற்றும் கல்வி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக உஷா கோல் கூறுகிறார்.

    புதுடெல்லி:

    போஜ்புரி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்பவ்னா சேத். இவர் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக் ஆகியோரின் முன்னிலையில் நடிகை சம்பவ்னா சேத் ஆம் ஆத்மியில் இணைந்தார். நடிகை சம்பவ்னாவுடன் மத்திய பிரதேச பாஜக மகளிரணி துணைத் தலைவி உஷா கோலும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக நடிகை சேத் மற்றும் பாஜக தலைவி உஷா கோல் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக சஞ்சய் சிங் கூறினார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கட்சியில் இணைந்தேன் என சேத் கூறியிருக்கிறார்.

    எங்கள் பகுதி மக்கள் சரியான சுகாதாரம் மற்றும் கல்வி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக பணியாற்ற விரும்புகிறேன் என உஷா கோல் தெரிவித்தார்.

    • குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 12.92 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன
    • ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்

    புதுடெல்லி:

    குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி, பாஜக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 12.92 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்துள்ளது ஆம் ஆத்மி. இதன்மூலம் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது.

    இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாஜக தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாக மணீஷ் சிசோடியா விமர்சனம்
    • ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகியிருப்பதாக பாஜக கூறியுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறி உள்ளது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

    என்னை யாரும் கட்டாயப்படுத்தியதால் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. நானாக முன்வந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நான் பிரசாரம் செய்யும்போது, தேசவிரோத மற்றும் குஜராத்திற்கு எதிரான கட்சியின் வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்டார்கள். நானும் யோசித்துப் பார்த்தேன். என் உள் மனம் சொல்வதை கேட்டேன். எந்த அழுத்தமும் இன்றி வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளேன். அப்படிப்பட்ட கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேட்பாளரை பாஜக கடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி அழுத்தமாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வேறு மாதிரியாக கூறியிருக்கிறார். அவர் தனது சொந்த கட்சியையே வசை பாடியது, இந்த விஷயத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    • பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் மணீஷ் சிசோடியா விமர்சனம்

    அகமதாபாத்;

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    இந்நிலையில், தங்கள் வேட்பாளர்களில் ஒருவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் புகார் கூறி உள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா பாஜகவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், காவல்துறையினரால் தேர்தல் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்துள்ளது.

    வேட்பாளரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரது வீடு பூட்டி கிடக்கிறது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஜரிவாலாவை இழுத்து வந்து அவரது வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதாக கூறி ஒரு வீடியோவை ஆம் ஆத்மி கட்சித் தலைவரான ராகவ் சத்தா, வெளியிட்டார். காவல்துறையும் பாஜக குண்டர்களும் சேர்ந்து, எங்கள் சூரத் கிழக்கு வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, வேட்புமனுவை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதைப் பாருங்கள்... 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்' என்ற வார்த்தை ஜோக் ஆகிவிட்டது என அவர் ட்வீட் செய்துள்ளார்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    • குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது
    • தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    • குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.
    • ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அந்த மாநிலத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    தனது கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் குஜராத் மக்களுக்கு தனது வேண்டுகோளையும் முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நான் உங்கள் சகோதரன், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இலவச மின்சாரம் தருகிறேன்; பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறேன். உங்களை அயோத்தியின் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    தற்போதைய சூழ்நிலையில், குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 90 முதல் 95 தொகுதிகள் வரை கைப்பற்றுவோம். மேலும் இந்த வேகம் தொடர்ந்தால் 140 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

    கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. 

    • ஆளுநரின் முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
    • ஜனநாயகம் முடிந்துவிட்டதாக அரவிந்ந் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    சண்டிகர்:

    ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், பாஜக தனது ஆபரேசன் தாமரை திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நாளை ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் மாநில முதலமைச்சர் பகவந்த் மான்.

    நாளை சட்டசபை சிறப்பு அமர்வை கூட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, ஆளுநர் மூலம் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென திரும்ப பெற்றார். சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'அமைச்சரவை கூட்டிய கூட்டத்தை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? எனவே, இப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆபரேசன் தாமரை தோல்வியடையத் தொடங்கி, ஆதரவு கிடைக்காததால், சட்டசபை கூட்டத்தொடருக்கான ​​அனுமதியை திரும்பப் பெறுமாறு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது' என்றார்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமானுல்லா கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தகவல்

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கான், டெல்லி வக்ப் வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். வக்ப் வாரியத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்தது தொடர்பாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமானுல்லா கானுக்கு லஞ்ச ஒழிப்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று மதியம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளது.
    • பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவரும், மாநில செய்தி தொடா்பாளருமான எஸ்.சுந்தரபாண்டியன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளுக்கு வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளதால் ஏழை, எளியோா் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.இது குறித்து பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.ஆகவே தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்வதுடன், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து தங்களது அறிக்கைகளை மாற்றி வருகின்றனர்.
    • இந்த விவகாரம் குறித்து தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். தங்களிடம் பா.ஜனதா ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பேரம் பேசியதாக சொல்லப்படும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சி எம்.பி. மனோஜ் திவாரி கூறும்போது, "மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து தங்களது அறிக்கைகளை மாற்றி வருகின்றனர். பாஜக ரூ.20 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டை கூறி இருப்பதால் இந்த விவகாரம் குறித்து தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

    • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது.
    • டெல்லி அரசு ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது.

    இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாளை டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டம் கூட இருக்கிறது. இதில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வாங்க பாஜக ரூ.800 கோடி ஒதுக்கியிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

    'ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. ரூ.800 கோடி யாருடைய பணம்? அதை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை நாடு அறிய வேண்டும். எங்களது எந்த எம்எல்ஏவும் விலை போகவில்லை. அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. டெல்லியில் நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்னும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தால் தேசிய கட்சியாக மாறும்.
    • குஜராத்தில் ஆட்சியமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி

    புதுடெல்லி:

    தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதேபோல் கோவாவிலும் கால்பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சட்டமன்ற தேர்தலில் 2 எம்எல்ஏக்களை பெற்றது. இந்நிலையில், கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனை பெருமை தரும் நிகழ்வாக பார்ப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இன்னும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் தேசிய கட்சியாக மாறும். இதற்காக அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஆம் ஆத்மியின் அடுத்த பெரிய இலக்கு குஜராத் மாநில தேர்தல். இதற்காக அங்கு மாவட்ட வாரியாக பிரசாரம் தொடங்கியிருக்கிறார் கெஜ்ரிவால். டெல்லி பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அறிவித்ததுபோன்று குஜராத்திலும் ஆட்சியமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல் அதிரடி திட்டங்களை கெஜ்ரிவால் தொடர்ந்து அறிவித்து வருவதால் இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    ×